பி.எஸ்.என்.எல் நிறுவனம், தனது ஆஃபரை ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்திருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த ஆஃபர் மூலம் குறிப்பிட்ட பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு கூடுதலாக 2.21ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.
ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டமானது, இந்த ஆஃபர், ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டருந்த நிலையில் பயனாளர் நலன் கருதி ஜூன் 30 ஆம் தேதி வரை இருக்கும் என்று மாற்றி நீட்டிப்புடன் அறிவிக்கப்பட்டது.
ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999 மற்றும் ரூ.1699 ஆகிய ப்ரீபெய்டு பேக்குகளை ரீசார்ஜ் செய்வோருக்கு 2.21ஜிபி கூடுதல் டேட்டா கொடுக்கப்பட்டது.

இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி 31 ஆம் தேதியுடன் முடியவிருந்த இந்த தள்ளுபடியை, ஏப்ரல் 30 வரை முதலில் நீட்டித்தது பி.எஸ்.என்.எல். இப்போது ஜூன் 30 வரை இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டது.
இரண்டாவது முறையாக இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது மூலம், ரூ.186 மற்றும் ரூ.429 பேக்குகளை ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3.21ஜிபி டேட்டா கிடைத்தது. அதேபோல ரூ.485 மற்றும் ரூ.666 பேக்குகளை ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3.7ஜிபி டேட்டா கிடைத்தது. இதற்கு கிடைத்த வரவேற்பால் இது மீண்டும் அறிமுகமாக வாய்ப்புள்ளது.