Mobile

ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு துவங்கியாச்சு…

ஒப்போ நிறுவனம் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனை மார்ச் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.

தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவுகள் இன்று துவங்கியுள்ளது, அதாவது இந்த முன்பதிவுகள் ப்ளிப்கார்ட், அமேசான், ஒப்போ மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 2019 ஆம் ஆண்டு சீனாவில் வெளியாகி, மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினைப் பெற்றது. இந்த ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் பல வகையான மாற்றங்களை செய்து, மேம்பட்ட அம்சங்களுடன் வெளியிட உள்ளதாகவும் ஒப்போ நிறுவனம் தரப்பில் தகவல் வெளியாகியது.

ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு துவங்கியாச்சு…

இந்த ஸ்மார்ட்போன் குறித்து தற்போது வரை கிடைத்துள்ள தகவலை இப்போது பார்க்கலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் இரண்டு செல்ஃபி கேமராவினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

பின்புறத்தில் 64 எம்.பி, 13 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்.பி. மோனோகுரோம் லென்ஸ் போன்றவை இருக்கும் என்று கூறப்படுகின்றது.

இதுகுறித்த பிற தகவல்கள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இந்த முன்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

Related posts

இன்று அறிமுகமான ‘Mi A3’ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் மோட்டோரோலா 75 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி!!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil