முதன்முறையாக போல்ட் நிறுவனம் மலிவு விலையில் தரமான ஆடியோ ஸ்டாம் என்று அழைக்கப்படும் புதிய இயர்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் 3.5எம்.எம் கனெக்டிவிட்டி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஆடியோ ஸ்டாம் இயர்போன் சாதனம் மூன்றுவித நிறங்களில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 3.5எம்.எம் கனெக்டிவிட்டியுடன் மைக்ரோபோன் மற்றும் இன்-லைன் ரிமோட் வசதியும் இந்த இயர்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த இயர்போனில் எக்ஸ்ட்ரா பாஸ் வசதி வழங்கப்பட்டள்ளது, எனவே இதனால் இயர்போனின் பேஸ் சார்ந்த அம்சம் சிறப்பானதாக இருக்கும்.
ஆடியோ ஸ்டாம் இயர்போனில் டைனமிக் டைரவர்கள், கெவ்லர் ரீ-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட கேபிள் வழங்கப்பட்டுள்ளது.
IPX5 சான்று பெற்ற ஆடியோ ஸ்டாம் இயர்போன் 13கிராம் எடை கொண்டிருக்கிறது, மேலும் இந்த சாதனத்தை வாங்குவோருக்கு ஒரு வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது. மலிவு விலையில் கிடைப்பதால் இதில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை எதிர்பார்க்க முடியும்.
ஆடியோ ஸ்டாம் இயர்போனின் உண்மை விலை ரூ.399, பின்பு இந்த இயர்போன் போட் பேஸ்ஹெட்ஸ் 100 மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது. குறிப்பாக இன்-லைன் ரிமோட் வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.