Gadgets

ஸ்போர்ட் மாடல் ஏர்பாட்ஸ் 511வி2 அறிமுகம் செய்த போட் நிறுவனம்!!

போட் நிறுவனம் ஹெட்போன், ஹெட்செட், இயர்போன் போன்றவற்றினைத் தயாரித்து அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது ஸ்போர்ட் வேரியண்டில் ஒரு ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஆஃப்லைன் கடைகள் எதிலும் விற்பனைக்கு வராத இந்த ஏர்பாட்ஸ் ஆன்லைனில் மட்டும் விற்பனையாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்போர்ட் மாடலில் இருக்கும் ஏர்பாட்ஸ் பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது 6எம்.எம். நீளம் கொண்ட ஏர்பாட் ஆணது அலைவரிசை 20ஹெர்ட்ஸ் முதல் 20 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரை கொண்டதாகவும் ப்ளூடூத் 5.0 மூலம் செயல்படுவதாகவும் உள்ளது. மேலும் மியூசிக் கன்ட்ரோல் அமைப்புகளையும் கொண்டுள்ளது.

இந்த ஏர்பாட்ஸ் 4 மைக்ரோஃபோன்கள் கொண்டதாகவும், மேலும் இந்த ஏர்பாட் 60 ஆம்ப். பேட்டரி திறன் கொண்ட்தாக உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டால் 6 மணி நேரத்திற்கு பேட்டரி நீடித்து இருக்கும்.

மேலும் ஏர்பாட்ஸ் 511வி2 என பெயரிடப்பட்ட இந்த ஏர்பாட் ஆனது கருப்பு வண்ணத்தில் சில்வர் ஃபினிஷிங் கொண்டதாக உள்ளது.

Related posts

பட்ஜெட் விலையில் விற்பனைக்குத் தயாரான வு ஸ்மார்ட் டிவிக்கள்!

TechNews Tamil

ஜூலை 22 ஆம் தேதி அறிமுகமாகிறது கேலக்ஸி வாட்ச் 3!!

TechNews Tamil

விற்பனையைத் தொடங்கிய Mi Band 4!!

TechNews Tamil