Apps

4 ஆண்டுகள் கழித்து ட்விட்டரில் புளூ டிக் வெரிபிகேஷன் சேவை அறிமுகம்!!

உலக அளவில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று, ட்விட்டர் ஆகும். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மட்டுமின்றி ட்விட்டரும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு சேவையாகும்.

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளமான ட்விட்டரில் மீண்டும் வெரிபிகேஷன் செய்யும் அம்சமானது அறிமுகம் ஆகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புளூ டிக் வெரிபிகேஷன் சேவையானது 2017 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது 4 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது.

4 ஆண்டுகள் கழித்து ட்விட்டரில் புளூ டிக் வெரிபிகேஷன் சேவை அறிமுகம்!!

அதாவது இந்த ட்விட்டர் புளூ டிக் வெரிபிகேஷன் சேவையானது 2021 ஆம் ஆண்டு மீண்டும் துவங்கப்பட உள்ளதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

ட்விட்டர் பயனர்கள் இந்த புளூ டிக் வெரிபிகேஷன் சேவையின் அறிமுகம் குறித்து மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

புளூ டிக் வெரிபிகேஷனில் பயனர்கள் எதிர்பார்க்கும் வகையில் அதிக அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று ட்விட்டர் தர்ப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த புதிய வெரிபிகேஷன் வழிமுறைகள் பற்றி பயனர்கள் கருத்து தெரிவிக்கலாம் எனவும் ட்விட்டர் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் மித்ரன் செயலி!!

TechNews Tamil

இனி ஏர்டெலில் 32ஜிபி இலவச டேட்டா!!

TechNews Tamil

எஸ்பிஐ மற்றும் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய பாரத் இன்ஸ்டா பே!!

TechNews Tamil