Apps

ஒரே சமயத்தில் பலரை பிளாக் செய்யலாம்.. இன்ஸ்டாகிராமில் வந்த புது வசதி..

சமூக வலைதளங்களைப் பயன்படுத்தாத இளைஞர்களை இப்போது நாம் பார்க்க முடியாது, பல வகைகளில் சமூக வலைதளங்கள் நம்மை இணைக்கின்றன. அந்த வகையில் பேஸ்புக் உலக அளவில் பல மில்லியன் பயனர்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது.

அதேபோல், அதற்கு அடுத்தபடியாக அதிக பயனர்களைக் கொண்ட ஒரு செயலியாக வாட்ஸ் அப் உலா வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ட்விட்டர், ஹலோ ஆப் என பல வலைதளங்கள் இருந்தாலும் இன்ஸ்டாகிராம் தனக்கென ஒரு இடத்தினைக் கொண்டதாக உள்ளது.

ஒரே சமயத்தில் பலரை பிளாக் செய்யலாம்.. இன்ஸ்டாகிராமில் வந்த புது வசதி..

தற்போது இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் விரும்பும் வகையில் ஒரே சமயத்தில் பல அக்கவுண்ட்களை பிளாக் செய்யும் அம்சத்தினை வழங்க உள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது இன்ஸ்டாகிராமில் பயனர்கள் தாங்கள் விரும்பாத பயனர்களின் அக்கௌண்ட்டினை பிளாக் செய்ய நினைத்தால், இனி எளிதாக நம்மால் பிளாக் செய்ய முடியும்.

இதற்கான சோதனையானது தற்போது நடத்தப்பட்டு வருகிறது, இந்த சோதனை முடிவடைந்தபின் இது விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்த அறிவிப்பினை இன்ஸ்டாகிராம் நிறுவனம் தற்போதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டுவரும் ஜேன் மன்சுன் வொங் எனும் ஆய்வாளர், இதுகுறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

Related posts

வாட்ஸ் ஆப்பில் வரவுள்ள அசரவைக்கும் அம்சம்!!

TechNews Tamil

ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா! நிலைகுலைந்த நெட்வொர்க்குகள்

TechNews Tamil

ஸ்மார்ட்போன்களை பாதித்த வாட்ஸ்அப் வைரஸ்!!

TechNews Tamil