Mobile

சீனாவில் அறிமுகமானது பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன்.!

பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அறிமுகம் ஆகியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இது 500nits பிரைட்நஸ், எம்.இ.எம்.சி தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகமானது பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன்.!

பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 650ஜிபி ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 20எம்பி செல்பீ கேமரா, 64எம்பி பிரைமரி லென்ஸ், 13எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 5எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் போன்றவற்றினையும், 20எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன் 4720எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ் / பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் டூயல் சிம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

டிசம்பர் 16 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள Vivo X30 Pro!

TechNews Tamil

இந்தியாவில் இன்று அறிமுகமான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil