இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த மாத துவக்கத்தில் கால் பதித்தது. ஏறக்குறைய 1 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது கொரோனா தன்னுடைய தீவிரத்தினைக் காட்டி வருகின்றது.
பிரதமர் மோடி மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கையானது 4000 ஐக் கடந்த நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரத் தயங்குகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்களான பால், மளிகை, மருந்து போன்ற பொருட்கள் மட்டுமே கிடைக்கப் பெறுகின்றன. இந்தநிலையில் ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்கும் நிறுவனங்களுக்கு அதிக அளவு ஆர்டர்கள் கிடைக்கப் பெறுகின்றன.

அந்தவகையில் ஆன்லைன் டெலிவரி செய்யும் நிறுவனமான பிக்பாஸ்கெட் கிடைக்கப் பெற்றுள்ள அதிக அளவிலான ஆர்டர்களை டெலிவரி செய்ய முடியாமல் திணறி வருகின்றது. இந்த சூழ்நிலையினை சமாளிக்க பிக்பாஸ்கெட் தற்போது 10,000 பேரை பணிக்கு சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த 10,000 பேர் நிறுவனத்தின் கிடங்கு மற்றும் ஹோம் டெலிவரிக்கு பயன்படுத்தப்படுவார்கள் என்று பிக்பாஸ்கெட் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்படுகிறது. மேலும் இந்த ஆள் எடுப்பு பணியானது 26 நகரங்களில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.