அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், தகவல் தொலைத் தொடர்பு துறையில், நம்பர் ஒன் நிறுவனமாக மாற போதுமான முயற்சிகளை செய்து வருகிறது. மற்ற நெட்வொர்க்குகள், அலைக்கற்றைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை செலுத்த முடியாமல் திணறிய நிலையில், அதன் பிளான்களின் விலையினை அதிகரித்தது.
ஆனால் பிஎஸ்என்எல் தொடர்ந்து வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில், பிளான்களை மலிவு விலையில் வழங்கி வருகிறது.

தற்போது வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயன்படுகிற வகையில், பாரத் இன்ஸ்டா பே என்ற ஆப்பினை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த ஆப்பினை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம் டிஜிட்டல் முறையில் கட்டணத்தினை மிகவுல் எளிய வகையில் செலுத்த முடியும். மேலும் பிஎஸ்என்எல்லின் அனைத்து வகையான சேனல் கூட்டாளர்களுக்கும் நிறுவனத்தின் அனைத்து கட்டண பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் முறையில் செய்ய உதவிகரமாக இருக்கின்றது.

மேலும் இந்த சேவையினை 24/7 என்ற நேர அடிப்படையில் பயன்படுத்த முடியும் என்பது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்.
மேலும் இந்தத் தளத்தினை பயன்படுத்தும் வகையில் எஸ்பிஐ வங்கி தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட வகையிலான டிஜிட்டல் ஐடி வழங்கப்படும்.