மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
மோட்டோரோலா ஒன் மேக்ரோ டிஸ்பிளே ஆனது 6.2-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் திர்மானம் போன்றவற்றினைக் கொண்டிருக்கும்.
மெமரி அளவினைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி உள்ளது, மெமரி நீட்டிப்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இது ஆக்டோ கோர் ஹீலியோ பி60 சிப்செட் வசதியை கொண்டதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை, மோட்டோரோலா ஒன் மேக்ரோ சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் கொண்டதாகவும், 8எம்பி செகன்டரி சென்சார் உடன் 2எம்பி மேக்ரோ சென்சாரும் அதனுடன் 2எம்பி டெப்த் சென்சார் போன்றவையும் கேமராவைப் பொறுத்தவரை அடங்கும்.
இதில் 8எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ் போன்றவையும் உள்ளது. மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,