மக்கள் யுபிஐ சேவையின்மூலம் ஏடிஎம் மெசினிலிருந்து பணத்தை எடுக்கும் வகையிலான புதிய யுபிஐ கியூஆர் சேவை தற்போது மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வங்கி பயனர்கள் யுபிஐ கியூஆர் அடிப்படையிலான சேவையின் மூலம் ஏடிஎம் மெசினிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம்.
ஏடிஎம் மோசடி தொடர்ந்து நடைபெற்று வருவதைக் குறைக்கவே இந்தமாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சேவையின் மூலம், ஏடிஎம் கார்டு இல்லாமல் யுபிஐ கியூஆர் அடிப்படையிலான சேவையின் மூலம் மக்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
கியூஆரை ஸ்கேன் செய்தால் போதும் வங்கியின் ஒருங்கிணைந்த UPI பயன்பாட்டுச் செயலி மூலம், ஏடிஎம்மில் உள்ள கியூஆர் குறியீட்டைப் ஸ்கேன் செய்து பயனர்கள் பாதுகாப்பாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
தற்போது பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மட்டுமே உள்ள இந்த சேவை மற்ற வங்கிகளிலும் வர வாய்ப்புள்ளது.
தற்பொழுது இந்த சேவையைப் பயன்படுத்தி பயனர்கள் ரூ.2000 வரை ஏடிஎம் எந்திரங்களிலிருந்து பணம் எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.