2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி அவ்வப்போது அதிக அளவில் சர்ச்சைகளை சந்தித்து இடைக்காலத் தடைவிதிப்பிற்கு ஆளாக்கப்பட்டாலும் அதற்கென தீவிர பயனர்கள் இருந்து வந்தனர்.
இந்தியாவில் டிக் டாக் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் தடை செய்யப்பட்டது. அமெரிக்காவின் அனைத்து நிறுவனமும் பைட்டான்சுடன் அனைத்து உறவுகளையும் துண்டிக்க உள்ளது.
பைட்டான்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் முறிந்தால், பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்பதால் டிக் டாக் நிறுவனம் இதுகுறித்த விஷயங்களை ஆராய்ந்து அமெரிக்காவில் டிக்டாக்கின் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக டிக்டாக் சமீபத்தில் அறிவித்தது.

ஆனால் எந்த ஒரு விஷயத்திற்கும் மசியாத அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டிக்டாக் செயலியை விற்பனை செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று, செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விற்பனை செய்தே ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
டிக்டாக்கிற்கு தடை அல்லது செயலியை விற்பனை செய்வது இவை இரண்டுதான் ட்ரம்பு கொடுத்துள்ள இரண்டு ஆப்ஷன்கள்.
பைட்-டேன்ஸ் நிறுவனம் டிக்டாக் செயலியினை விற்பனை செய்யும் பணியில் முனைப்பு காட்டி வருகிறது.