சியோமி நிறுவனத்தின் Poco F1 ஸ்மார்ட்போன் ஆனது ஆன்லைன் தளங்களிலும் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் தொடர்ந்து விலைக்குறைப்புகளை பெற்று வருகிறது. கடந்த வாரம் நடந்து முடிந்த Poco Days விற்பனையின் போது ரூ.8,000/- வரையிலான தள்ளுபடியை பெற்றது.
இப்போது, சியோமி நிறுவனம் ஆஃப்லைன் விற்பனையிலும் Poco
F1 ஸ்மார்ட்போனுக்கு நிரந்தர
விலைக்குறைப்பை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சியோமி நிறுவனத்திடம் இருந்து, நிறுவனத்தின் இந்திய ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களுக்கு Poco F1 மீதான விலைக்குறைப்பு குறித்த ஒரு சுற்றறிக்கை வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், Poco F1 ஆனது ரூ.5,000/- வரையிலான விலைக்குறைப்பை பெறும். அதாவது அடிப்படை மற்றும் மிட்ரேன்ஜ் வேரியண்ட் ஆனது ரூ.2000/- என்கிற விலைகுறைப்பையும், ஹைஎண்ட் வேரியண்ட் ஆனது ரூ.5000/- என்கிற விலைக்குறைப்பையும் பெறும்.
கூறப்படும் விலைக்குறைப்பானது சாத்தியமாகும் பட்சத்தில், Poco F1 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி வேரியண்ட்கள் ஆனது தலா ரூ.2000/- என்கிற விலைக்குறைப்பை பெற்று ரூ.15,999/-க்கும் மற்றும் ரூ.18,999/- க்கும் வாங்க கிடைக்கும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ.17,999/-க்கும், ரூ.20,999/-க்கும் வாங்க கிடைத்தது. இந்த விலைக்குறைப்பானது Kevlar edition-னுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டாப்-எண்ட் வேரியண்ட் ஆன 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலானது ரூ.5,000/- என்கிற விலைக்குறைப்பை பெறுகிறது. ஆக இந்த வேரியண்ட்டின் ஸ்டாண்டர்ட் மற்றும் கெவ்லர் பதிப்பு ஆகிய இரண்டுமே இப்போது ரூ.22,999/-க்கு வாங்க கிடைக்கும். முன்னதாக இந்த வேரியண்ட் ரூ.27,999/-க்கு வாங்க கிடைத்தது.