கூகுளில் தற்போது பெரிய அளவில் பயன்படுத்தப்படும் ஒரு செயலியாக யூடியூப் உள்ளது.
எந்தவொரு தகவலையும் செய்தி வடிவில் பார்ப்பதைவிட காண்பது புரியும் வகையில் இருப்பதால் யூடியூப் பார்வையாளர்களின் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்ற ஒன்றாக மாறிவிட்டது.
யூடியூப் மூலம் பலரும் தற்போது வீடியோக்களை உருவாக்கி போஸ்ட் செய்கின்றனர். வீடியோக்களுக்குக் கிடைக்கும் பார்வைகள் மூலம் பலரும் இதன் மூலம் வருமானம் ஈட்டத் துவங்கிவிட்டனர்.

பொழுதுபோக்கு, சமையல், ஆடைகள், அணிகலன்கள், ஷாப்பிங்க் என அனைத்துத் துறை சார்ந்த வீடியோக்களையும் யூடியூப்பில் பார்க்கலாம்.
யூடியூப் அவ்வப்போது அப்கிரேடு செய்யும் வகையில் முக்கிய அம்சங்களை வெளியிட்டும் வருகின்றது.
அந்தவகையில் தற்போது யூடியூப் சிறப்பு அம்சம் ஒன்றினை வழங்கியுள்ளது. அதாவது யூடியூப்பில் தற்போது பெரிய அளவில் ட்ரெண்ட் அடிக்கும் அம்சமாக இருப்பதுதான் யூடியூப் ஷார்ட்ஸ்.
இந்த ஷார்ட்ஸ் மற்றும் லைவ் வீடியோக்களுக்கு தற்போது யூடியூப்பின் லைப்ரரி பக்கத்தில் புது டேப்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் ஷார்ட்ஸ் வீடியோ மற்றும் லைவ் வீடியோவை அதன் தனி தனி பக்கங்களில் சென்று பார்வையாளர்கள் இனி பார்க்கலாம்.
இதன்மூலம் யூடியூப்பர்களும் ஷார்ட்ஸ் வீடியோ மற்றும் லைவ் வீடியோவை அந்தந்த கேட்டகரி பக்கத்தில் காட்சிப்படுத்தலாம்.