Gadgets

இந்தியாவில் வெளியானது அவிட்டா காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப்!

அவிட்டா நிறுவனம் இந்தியாவில் தற்போது காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த அவிட்டா காஸ்மோஸ் லேப்டாப் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

அவிட்டா காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப்பானது 11.6 இன்ச் 1920×1080 பிக்சல் FHD IPS மல்டி-டச் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் அவிட்டா காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப்பானது இன்டெல் செலரான் N4000 டூயல் கோர் பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது. மேலும் கூடுதல் என்று கொண்டால் UHD 600 Graphics வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இந்தியாவில் வெளியானது அவிட்டா காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப்!

அவிட்டா காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப்பானது மெமரி அளவு என்று கொள்ளும்போது 4 ஜிபி DDR4 ரேம், 64 ஜிபி eMMC மெமரி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொண்டதாக உள்ளது.

மேலும் இது விண்டோஸ் 10 ஹோம் அம்சத்தையும், வெப் கேமரா அம்சமாக 2 எம்பி பிரைமரி மற்றும் செல்பி கேமராவினையும் கொண்டுள்ளது.

ஆடியோ வசதிக்காக 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவு என்று கொண்டால்  வைபை, ப்ளூடூத் 4 வசதி கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு என்னும்போது அவிட்டா காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப்பானது அதிகபட்சம் 6 மணி நேர பேட்டரி பேக்கப் வசதி கொண்டுள்ளது.

Related posts

ஒரே நேரத்தில் 3 ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய ஏற்ற Mi Power Bank 3!

TechNews Tamil

2 மாதங்களுக்கு இலவச சேவைகளை வழங்கும் டிஷ் டிவி மற்றும் டி2எச்

TechNews Tamil

சீனாவில் வெளியானது சியோமி எம்ஐ வயர்லெஸ் இயர்பட்ஸ் 2சி மாடல்!!

TechNews Tamil