Apps

இனி வாட்ஸ்அப் வெப் வெர்ஷனிலும் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி!!

வாட்ஸ்அப் செயலியானது உலக அளவில் பேஸ்புக்கினை அடுத்து அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாகும். வாட்ஸ் ஆப் செயலியானது பயனர்களால் அதிக அளவில் விரும்பப்படும் வகையில் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது ஒரு சிறப்பான அம்சத்தினை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாட்ஸ் ஆப் வெப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்  வசதியினை அறிமுகம் செய்தது.

அதாவது வாட்ஸ் ஆப் செயலியினை லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் பயன்படுத்த நினைப்போர் வாட்ஸ் ஆப் வெப் மூலம் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் இப்போது வாட்ஸ்அப் வெப் பயன்படுத்திவரும் பயனர்கள் மெசேஜ் அனுப்புதல், வீடியோ, ஆடியோ அனுப்புதல், டாக்குமெண்டுகள் அனுப்புதல் என்பதுபோன்ற பயன்களை மட்டுமே அனுபவித்து வருகின்றனர்.

இனி வாட்ஸ்அப் வெப் வெர்ஷனிலும் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி!!

அந்தவகையில் இப்போது வாட்ஸ் ஆப் வெப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் இனி வாட்ஸ் ஆப் பயனர்கள் வாட்ஸ்அப் வெப் மூலம் கால்களை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சோதனைக்கட்டமாக இந்த அம்சமானது பீட்டா பதிப்பில்  வழங்கப்படும் என்றும், மேலும் முதற்கட்டமாக வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கப் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related posts

வாட்ஸ்அப்பில் விரைவில் ஸ்மார்ட்போன்களுக்கு வரவுள்ள டார்க் தீம் வசதி!!

TechNews Tamil

வாட்ஸ்அப் செயலியினை அப்பட்டமாக காப்பி அடிச்ச சிக்னல் ஆப்!!

TechNews Tamil

வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக ஜோஹோ நிறுவனம் வெளியிட்டுள்ள அரட்டை செயலி!!

TechNews Tamil