கொரோனா உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆட்டிப் படைத்து வருகின்றது. உலகின் பல நாடுகளில் இதன் தாக்கம் உள்ள நிலையில், இந்தோனேசியாவில் ஒரு மாதத்தில் மட்டும் 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
இதனால் மக்கள் அன்றாட உணவிற்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் இலவச அரிசி வழங்கும் ஏடிஎம்-கள் இந்தோனேசியாவில் சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஏடிஎம் மெஷின் மூலம், தினமும் 1.5 டன் உணவானது விநியோகிக்கப்படுகிறது, இதன்மூலம் ஏழை எளிய மக்கள் மற்றும் வேலை இழந்தோர் பெரிய அளவில் பயன்பட்டுள்ளனர்.

இந்த ஏடிஎம் 24/7 நேரமும் அரிசியை விநியோகிக்கிறது. இந்த ஏடிஎம் பகுதிகளில் சமூக இடைவெளி கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்களில் ராணுவத்தினர் பாதுகாப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவின் தாக்கமானது மேலும் தீவிரமாகி வரும் நிலையில், இந்த அரிசி ஏடிஎம் ஆனது அடுத்த 2 மாதங்களுக்கு தொடர்ச்சியாக செயல்படும் என்று இந்தோனேசியா அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன்மூலம் லட்சக்கணக்கானோர் நிச்சயம் பயன்படுவார்கள் என்று கூறப்படுகின்றது.