கொரோனா உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆட்டிப் படைத்து வருகின்றது. உலகின் பல நாடுகளில் இதன் தாக்கம் உள்ள நிலையில், வியாட்நாமில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது 265 ஆக உள்ளது.
ஆனாலும் வியட்நாமில் கொரோனாவின் தீவிரம் அதிகமாகாமல் இருக்க, தற்போதே அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, சமூக விலகலைக் கடைபிடிக்க அறிவுறுத்தி வருகிறது. சிறு வணிகங்களை திறம்பட மூடிவிட்டு ஆயிரக்கணக்கானவர்களை வேலையிலிருந்து வெளியேற்றியுள்ளது வியட்நாம்.

இதனால் மக்கள் அன்றாட கஞ்சிக்கே கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் இலவச அரிசி வழங்கும் ஏடிஎம்-கள் வியட்நாமை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அதாவது ஹனோய் நகரில் ஒரு பெரிய நீர் தொட்டியில் உள்ள அரிசி காலை 8மணி முதல் 5மணி வரை பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றது.
ஹியூவிலும், ஏடிஎம் மூலம் மக்களுக்கு 2 கிலோகிராம் இலவச அரிசி வழங்கப்படுகிறது. அடுத்து ஹோ சி மின் நகரில் ஒரு அரிசி ஏடிஎம் 24/7 நேரமும் அரிசியை விநியோகிக்கிறது.