அசுஸ் நிறுவனத்தின் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை
செய்யப்படுகிறது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,499-விலையில் விற்பனை
செய்யப்படுகிறது.

இக்கருவி 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520
x 720 பிக்சல்
திர்மானம் மற்றும் கொரில்லா கிளாஷ் 6
பாதுகாப்பு அம்சங்களுடன்
வெளிவருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின்
வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ
எம்2 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியைக்
கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின்
பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.