ஆசஸ் ஜென்ஃபோன் 7 ஆகஸ்ட் 26 ஆம் தேதி தைவானில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.. ஆசஸ் ஜென்ஃபோன் 7 குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது தைவான் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ள இந்த விழாவானது ஆன்லைன் முறையில் நடைபெறவுள்ளது.
ஆசஸ் ஜென்ஃபோன் 7 ஸ்மார்ட்போன் ஆனது 6.7 அங்குல காட்சி அளவினைக் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது, மேலும் இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை உள்சேமிப்பினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC சிப்செட் மூலம் இயங்குவதாக இருக்கும் என்று தெரிகிறது.
ஆசஸ் ஜென்ஃபோன் 7 பேட்டரியைப் பொறுத்தவரை, 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் 4,115 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இணைப்பு விருப்பத்தினைப் பொறுத்தவரை வைஃபை 6, ப்ளூடூத் வி 5 மற்றும் என்எப்சி போன்றவற்றினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.