Gadgets

சிறப்பான அம்சங்களுடன் அசுஸ் TUF Dash F15 கேமிங் லேப்டாப் வெளியீடு!

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான அசுஸ் நிறுவனம் தற்போது TUF Dash F15 கேமிங் லேப்டாப் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த அசுஸ் TUF Dash F15 கேமிங் லேப்டாப் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

அசுஸ் TUF Dash F15 கேமிங் லேப்டாப் 15.6 இன்ச் டிஸ்பிளே மற்றும் 240Hz refresh rate வசதியைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த அசுஸ் TUF Dash F15 கேமிங் லேப்டாப் ஆனது 76Wh பேட்டரி மற்றும் 100W வரை டைப்-சி அடாப்டர்கள் வசதி கொண்டதாகவும் 16 மணி நேரத்திற்கும் அதிகமாக பேட்டரி பேக்கப் கொண்டதாக உள்ளது.

சிறப்பான அம்சங்களுடன் அசுஸ் TUF Dash F15 கேமிங் லேப்டாப் வெளியீடு!

அசுஸ் TUF Dash F15 கேமிங் லேப்டாப் தண்டர்போல்ட் 4, யுஎஸ்பி 3.2 ஜென் 1, எச்டிஎம்ஐ 2.0 போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளூடூத் 5.2, வைஃபை போன்றவற்றினை இணைப்பு ஆதரவுகளாகக் கொண்டதாக உள்ளது.

மேலும் அசுஸ் லேப்டாப் 11 வது ஜெனரல் இன்டெல் கோர் i7-11370H CPU வசதியினைக் கொண்டதாக உள்ளது. மெமரி அளவாக 32GB of DDR4 ரேம் வசதி மற்றும் 1 டிபி வரை சேமிப்பு வசதி கொண்டதாக உள்ளது.

ஆடியோ எனக் கொண்டால் டி.டி.எஸ், எக்ஸ் அல்ட்ரா தொழில்நுட்பம், இரட்டை ஸ்பீக்கர்கள், ஸ்டீரியோ ஹெட்செட் கொண்டதாக உள்ளது.

Related posts

சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன்!!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் ரெட்மி மேக்ஸ் 86 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளியீடு!!

TechNews Tamil

பல செயல்பாடுகளைக் கண்காணிக்க உதவும் Huawei Watch GT 2!

TechNews Tamil