Mobile

மார்ச் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள ஆசஸ் ROG ஸ்மார்ட்போன் 5!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆசஸ் நிறுவனத்தின் ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 ஆனது மார்ச் 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 6.78 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே, 20:9 விகித 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது சிப்செட் வசதி என எடுத்துக் கொண்டால் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

மார்ச் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள ஆசஸ் ROG ஸ்மார்ட்போன் 5!!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை  ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 ஆண்ட்ராய்ட் 11 மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரி அளவு என எடுத்துக் கொண்டால், ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 16ஜிபி ரேம் வசதியினைக் கொண்டுள்ளது.

ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 பின்புறத்தில்  64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 8 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா மற்றும் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி அளவு என எடுத்துக் கொண்டால் ஆசஸ் ஆர்ஓஜி போன் 56000 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

மே 6 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள மோட்டோரோலா ரேசர் சாதனம்!

TechNews Tamil

விரைவில் வெளியாகவுள்ள விவோ எக்ஸ்60டி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசரவைக்கும் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஹுவாய் பி40 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil