அசுஸ் நிறுவனம் தரமான மற்றும் பாதுகாப்பு வசதி கொண்ட அசுஸ் ROG Phone 2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
பப்ஜி போன்ற கேமர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் கொண்டு உள்ளது. இது 18வாட் மற்றும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு வந்துள்ளது.
செப்டம்பர் 30 ஆம் முதல் இந்த அசுஸ் ROG Phone 2 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வசதியையும் இது கொண்டுள்ளது.
கேமிங்க் ஆர்வம் கொண்டவர்கள் மனம் கவரும்படியாக பப்ஜி விளையாட்டுகளுக்கு ஏற்றபடி இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 2.9 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபி வசதி கொண்டுள்ளது.
மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மையானது.
கேமராவைப் பொறுத்தவரை 48எம்பி பிரைமரி லென்ஸ் + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் என மூன்று கேமராக்கள் உள்ளன.
மேலும் 24எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் போன்றவையும் இதில் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் புளூடூத் வி5.0, வைஃபை 802.11 போன்றவை உள்ளது.