Mobile

அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 5 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான அசுஸ் நிறுவனம் இந்தியாவில் ரோக் போன் 5 மாடலை வெளியிட்டுள்ளது. இந்த அசுஸ் ரோக் போன் 5 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

அசுஸ் ரோக் போன் 5 ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் 2448×1080 பிக்சல் FHD+ 144Hz OLED டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி எனக் கொண்டால் இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்  மற்றும் அட்ரினோ 660 GPU வசதியினைக் கொண்டுள்ளது.

அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 5 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

மெமரி அளவு எனக் கொண்டால் 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி, 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரோக் யுஐ இயங்குதளமாகக் கொண்டுள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி 125˚ அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா,  24 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி கொண்டதாகவும், பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 65 வாட் ஹைப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

Related posts

செப்டம்பர் 25 ல் அறிமுகமாகவுள்ள சியோமியின் ரெட்மி 8ஏ!!

TechNews Tamil

அறிமுகமானது ஹூவாய் நிறுவனத்தின் ஹார்மனி ஓஎஸ்!

TechNews Tamil

ஜியோனி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஜியோனி கே3 ப்ரோ!

TechNews Tamil