மத்திய அரசின் உத்தரவின்படி ஆதார்டு கார்டு தனி நபர் வங்கிக் கணக்கு முதல் சம்பள கணக்குவரை நம்முடைய அனைத்து கணக்குகளுடனும் இணைக்கப்பட்டது.
அந்தவகையில் பான் கார்டு நம்முடைய அனைத்து வகையான விவரங்களுடன் இணைக்கப்பட்டு வருகிறது
இதன் மூலம் பண பரிவர்த்தனைகளை அதிகப்படுத்தவும் மற்றும் கணக்கு விவரங்களை எளிதில் அறிந்துகொள்ளவும் அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் பான் கார்டு இல்லாதவர்களுக்கு, பான் கார்டினை கட்டாயம் பயன்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த கார்டு வழங்கப்பட்டு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த பான் கார்டு வழங்கும் நடைமுறையினை எளிதாக்க ஒரு புதிய திட்டத்தினை தீட்டினர்.
அதாவது ஆன்லைன் மூலம் உடனடியாக பான்கார்டு வழங்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இது இந்த மாத இறுதிக்குள் அமலுக்கு வர உள்ளது.
மேலும் இந்த பான் கார்டினை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும்போது வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.