Information Technology

வாட்ஸ் அப்பில் போட்டோவை மாத்தி அனுப்புபவரா.. உங்களுக்கான அப்டேட்..

வாட்ஸ் அப்பில் போட்டோக்களை ஷேர் செய்யும்போது, மாத்தி அனுப்புபவரா நீங்கள்? கவலையே வேண்டாம் உங்களுக்காகவே வாட்ஸ் அப் நிறுவனம் புது முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வருகிறது.

அதாவது போட்டோக்களை அனுப்பும்போது மாற்றி அனுப்பிவிடாமல் இருக்க, புதிய அப்டேட் செய்வதற்கான முயற்சி ஒன்றை வெற்றிகரமாக 70% முடித்திருக்கிறது வாட்ஸ் அப் நிறுவனம்.

போட்டோவினை கான்டாக்ட் லிஸ்டில் உள்ள ஒருவருடன் ஷேர் செய்யும்போது, வேறு ஒருவருக்கு அனுப்பும் பட்சம் பட்சத்தில் அலர்ட் கிடைக்கும் இந்த புதிய அப்டேட்டில்.

வாட்ஸ் அப்பில் போட்டோவை மாத்தி அனுப்புபவரா.. உங்களுக்கான அப்டேட்..

மாற்றி அனுப்புவதற்கு முக்கிய காரணம் யாருக்கு ஷேர் செய்கிறோமோ அவர்களின் டிபி சிறிய அளவில் இருப்பதால், நாம் பல நேரங்களில் குழப்பமடைந்து மாற்றி அனுப்புவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதனால் ஷேரிங்க் ஆப்ஸனில் சில மாற்றங்களை செய்து வருவதாக வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிட்டுள்ளது.

இது வாட்ஸ் அப் பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எப்போது வரும் என்பதுதான் மக்களின் பெரும் கேள்வியாக உள்ளது.

Related posts

Work@Home பயனர்களுக்கு ஏர்டெல் அறிவித்துள்ள ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்பிலான பேக்குகள்!!

TechNews Tamil

ரூ.399 க்கு ஜியோ லைட் போனை அறிமுகப்படுத்தவுள்ள ஜியோ நிறுவனம்!!

TechNews Tamil

வேலிடிட்டியினை குறைத்த ஜியோ… கடுப்பில் வாடிக்கையாளர்கள்!!

TechNews Tamil