Apps

கொரோனா சோதனை மையம் குறித்த தகவல் பெற ஆப்பிளின் மேப்!

கொரோனா குறித்த தகவல்களை அறிந்து கொள்ளவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளவும் என பல வகையான செயலிகள் அவ்வப்போது அறிமுகப் படுத்தப்பட்ட வண்ணமே உள்ளது.

அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் அதன் மேப் மூலம் அருகிலுள்ள கொரோனா சோதனை மையம் குறித்த தகவலை தெரிவிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, ஆப்பிளின் இந்த மேப்பின் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் இன்ன பிற சுகாதார மையம் குறித்த தகவல்கள், மேலும் கொரோனாவால் பாதிப்படைந்த மக்கள் குறித்த தகவல்கள் இவற்றினை பதிவு செய்வதற்கான ஆப்சனை வழங்கி வருகிறது.

கொரோனா சோதனை மையம் குறித்த தகவல் பெற ஆப்பிளின் மேப்!

இந்தப் பதிவானது அந்தந்த மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் தரப்பில் செய்து முடிக்கப்பட வேண்டும். தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் கொரோனா சோதனை மையம், பாதிக்கப்பட்டோர் போன்ற தகவல்கள் குறித்து ஆப்பிள் மேப்பில் காண முடியும்.

சாதாரண மருத்துவமனைகளைத் தவிர்த்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள்/ இடங்கள் சிவப்பு கலரில் குறிப்பிடப்பட்டிருக்கும். இத்துடன், அந்த மருத்துவ மனையுடன் தொடர்புடைய சுகாதார வழங்குநர், தொலைபேசி எண் போன்ற தகவல்களும் அதில் குறிப்பிடப் பட்டிருக்கும்.

இந்த நேரத்தில் ஆப்பிளின் இந்த மேப்பானது பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும்.

Related posts

மலிவு விலையில் ஜியோ செயலியினை பயன்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிளான்கள்!!

TechNews Tamil

பி.எஸ்.என்.எல்.லின் ஃபேமிலி 1199 கோம்போ பிளான்!

TechNews Tamil

இந்த மாத இறுதிக்குள் வெளியாகிறது வாட்ஸ் ஆப் பே!!

TechNews Tamil