உலக நாடுகள் அனைத்தும் பல வகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும், கொரோனா வைரஸ் பரவியது அதிர்ச்சிகரமான விஷயமாகும்.
சீனாவில் உற்பத்தியான இந்த வைரஸ், உலகம் முழுவதும் உள்ள 25 நாடுகளில் தற்போது பரவியுள்ளது.
சீனா சென்று திரும்பிவரும் மக்களை மிகவும் தீவிரமாக பரிசோதித்த பின்னரே இந்தியாவுக்குள் அனுமதித்தனர். அந்த நிலையிலும், இந்தியாவிலும் இந்த பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.
தற்போது சீனாவில் 12,000 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உள்ள ஆப்பிள் அனைத்து கடைகளையும் மூடவுள்ளது.

மேலும் இந்த கடை அடைப்பானது பிப்ரவரி 9 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால், மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் சமீபத்தில் கால வரையற்ற விடுமுறையினை சீனாவில் உள்ள அலுவலகங்களில் அறிவித்ததை அடுத்து, ஒவ்வொரு நிறுவனங்களும் தனது விடுமுறையினை அறிவித்து வருகின்றன.