ஆப்பிள் நிறுவனம் தற்போது மேக் மினி மாடலை ஆப்பிள் நிறுவனத்தின் ஒன் மோர் திங்க் என்ற நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மேக் மினி மாடல் ஆனது அதிநவீன எம்1 சிப் கொண்டதாக உள்ளது.
மேலும் இது அதிநவீன அளவில் எம்1 5நானோமீட்டர் என்ற அளவில் உருவான சிப் என்பதால், மிகவும் சிறப்பான வேகவசதிகளைக் கொண்டுள்ளது, மேலும் இது 16 மில்லியன் டிரான்சிஸ்டர்கள் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது. மேலும் மெமரி அளவுகளைப் பொறுத்தவரை 8 கோர் சிபியு மற்றும் 8 கோர் ஜிபியு வசதி கொண்டுள்ளது.

இந்த மேக் மினி மாடல் 3 மடங்கு அளவில் வேகமான சிபியு வசதியினைக் கொண்டதாகவும், மேலும் 8 கோர் ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது மிகவும் அதிவேக அளவில் அதாவது ஆறு மடங்கு வேகமான கிராபிக்ஸ் வசதியினைக் கொண்டுள்ளது.
இதன் அதிவேக திறனுக்கு இதன் நியூரல் என்ஜின் முக்கிய காரணமாக உள்ளது. இணைப்பு ஆதரவு என எடுத்துக் கொண்டால் இந்த மேக் மினி மாடல் ஆனது ஈத்தர்நெட், யுஎஸ்பி 4 / தண்டர்போல்ட், ஹெச்டிஎம்ஐ 2.0, யுஎஸ்பி ஏ, ப்ரோ டிஸ்ப்ளே எக்ஸ்டிஆர் வசதி போன்ற வசதிகளைக் கொண்டதாக உள்ளது.