ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11 தொடர் வெளியீட்டு நிகழ்ச்சியினை நடத்தியது, அதில் மூன்று புதிய ஐபோன்களுடன் புதிய ஐபாட் மாடல் ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐபாட் ஆனது
வைஃபை ஒன்லி மற்றும் வைஃபை + செல்லுலார் ஆகிய
இரண்டு வகைகளின் கீழ் வெளியாகியுள்ளது. 32 ஜிபி அளவிலான வைஃபை ஒன்லி வகையானது ரூ.29,900 க்கும். 128 ஜிபி அளவிலான வைஃபை ஒன்லியின் வகையானது ரூ.37,900 க்கும் விற்கப்படுகிறது.
32 ஜிபி அளவிலான வைஃபை + செல்லுலார் மாடல் ரூ.40,900 க்கும்,

128 ஜிபி அளவிலான வைஃபை+
செல்லுலார் மாடலின் விலை ரூ.48.900 க்கும் விற்கப்படுகிறது.
இந்த iPadOS, கொண்டு இயங்குகிறது. மேலும் இது 2160×1620 பிக்சல்கள் தீர்மானம், 264 பிபி பிக்சல் அடர்த்தி மற்றும் 500-நைட்
பீக் ப்ரைட்னஸ் உடன் 10.2 அங்குல ரெட்டினா ஐபிஎஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
மேலும் 8 மெகாபிக்சல் அளவிலான (எஃப் / 2.4 ) பின்புற கேமராவைக்
கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 1.2 மெகாபிக்சல் அளவிலான (எஃப்
/ 2) செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
இது வைஃபை 802.11 ஏசி மற்றும் ப்ளூடூத் வி 4.0 ஆகியவைகளை கொண்டுள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
மற்றும் இரட்டை மைக்ரோஃபோன் ஆகியவைகளைக் கொண்டிருக்கும்.