Mobile

மில்லியன் கணக்கான பயனர்களை எரிச்சலூட்டும் ஆப்பிள் ஐபோன் iOS 13!!

ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் பலவற்றினை இந்த ஆண்டின் துவக்கத்திலேயே வெளியிட்டது.

தற்போது iOS 13 ஐப் பயன்படுத்தும் ஒவ்வொரு ஐபோன் உரிமையாளர்களும், அந்த போன் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். பல மில்லியன் கணக்கானோர் இதனைப் பயன்படுத்தாமல் விட்டுவிடலாம் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டனர்.

அதாவது iOS 13 செல்லுலார் பிழை என்ற ஒன்றே வாடிக்கையாளர்களின் அதிருப்திக்குக் காரணமாகும். அதாவது  இந்த மொபைலில் உள்ள டேட்டாவானது விறுவிறுவென தீர்ந்து போகிறது.

இதனால் பில் தொகையானது மிக அதிகமானதாகவோ அல்லது பிளான் காலாவதி ஆகும் முன்னரே டேட்டா காலி ஆகுதல் என்பது போன்ற பிரச்சினைகளை உருவாக்குகிறது.

மில்லியன் கணக்கான பயனர்களை எரிச்சலூட்டும் ஆப்பிள் ஐபோன் iOS 13!!

பாதிக்கப்பட்ட பயனர்கள் பல மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார்கள், அதாவது இவர்கள் மொபைல் தரவை ஆஃப் செய்தாலும் கூட டேட்டா காலி ஆவது நிறுத்தப்படுவதில்லை. இதற்கான ஒரே தீர்வு, ஐபோன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்வதாகும்.

அதாவது இந்த டேட்டாவினை அன் இன்ஸ்டால் செய்த ஆப்கள் தீர்க்கிறது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இதனைத் தெரிந்துகொள்ள பயனர்கள் அமைப்புகள்> செல்லுலார்> செல்லுலார் தரவுக்கு செல்லவும். இந்த ஆப்சனுக்குள் அன் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப்கள் நுகரும் டேட்டா குறித்த விவரங்களைக் காண முடியும். மேலும் நாம் போனை உபயோக்கிக்காமல் இருக்கும்போதே, அன் இன்ஸ்டால் நுகரும் இந்த டேட்டாக்களால் போன் சூடாகவும் செய்கிறது.

Related posts

அறிமுகமானது ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

48MP கேமிரா ஸ்மார்ட் போன் உடன் வெளியான மோட்டோரோலா ஒன் ஸூம்

TechNews Tamil

விலைகுறைக்கப்பட்ட நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil