ஆப்பிள் நிறுவனம் வியாழக்கிழமை தனது வளாகத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி நிகழ்விற்கு அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளது,
ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடக்கவுள்ள இந்த நிகழ்வில் இடம்பெறவுள்ள தயாரிப்புகள் பற்றிய தகவல்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய ஐபோன் 11 ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் சேவைகளை விற்பனை செய்வதில் முன்னுரிமை வழங்கும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.

புதிய ஐபோன்கள் மேம்பட்ட செயதிறன் ஆற்றல் கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது,
கடந்த ஆண்டுமுதல் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் தன் இடத்தை இழந்துள்ளது, மிக சாதாரண தயாரிப்புகளில் உள்ள அம்சங்களே ஐ போனில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இழந்த சந்தை மதிப்பினை ஈடுகட்டும் வகையில், ஆப்பிள் ஐ போன் 11 இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பெரிதளவில் இருந்து வருகிறது.
அதற்கேற்பவே இந்த மாடல் ஐபோனைப் பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளதாகத் தெரிகிறது. இதுவே ஐ போன் பயன்படுத்தும் ஒரு சிறந்த உத்தியாக உள்ளது.