Gadgets

வெளியானது அசரவைக்கும் அம்சங்களுடன் ஆப்பிள் ஐபேட் ப்ரோ!!

ஆப்பிள் நிறுவனம் மேம்பட்ட அம்சங்களுடனான ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல்களானது ஏ12இசட் பயோனிக் பிராசஸர், அல்ட்ரா வைடு கேமரா, 5 ஸ்டூடியோ தர மைக்குகள், LiDAR ஸ்கேனர் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

1. ஆப்பிள் நிறுவனத்தின் 11 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் இந்திய விலை- ரூ. 71,900

2. ஆப்பிள் நிறுவனத்தின் 11 இன்ச் ஐபேட் ப்ரோ வைபை + செல்லுலார் மாடல் இந்திய விலை- ரூ. 85,900

3. ஆப்பிள் நிறுவனத்தின் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் இந்திய விலை- ரூ. 89,900

4. ஆப்பிள் நிறுவனத்தின் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ வைபை + செல்லுலார் மாடல் இந்திய விலை- ரூ. 1,03,900

வெளியானது அசரவைக்கும் அம்சங்களுடன் ஆப்பிள் ஐபேட் ப்ரோ!!

இந்த ஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடலானது 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என்ற இரண்டு வகைகளில் வெளியாகி உள்ளது. அதாவது இந்த மாடல் 11 இன்ச் மாடல் ஆனது 2388×1668 பிக்சல் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளேவினையும், 12.9 இன்ச் மாடல் ஆனது 2732×2048 பிக்சல் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளேவினையும் கொண்டுள்ளது.

இது ஆக்டா கோர் ஏ12இசட் பயோனிக் பிராசஸர்,  8 கோர் ஜி.பி.யு. மற்றும் எம்12 மோஷன் பிராசஸர்   கொண்டதாக உள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை 128 ஜி.பி. / 256 ஜி.பி. / 512 ஜி.பி. / 1000 ஜி.பி. மெமரி கொண்டதாக உள்ளது.

இது 12 எம்.பி. கேமரா, 10 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 7 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. போர்டிரெயிட் லைட்டிங், ரெட்டினா ஃபிளாஷ், ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர். போன்றவற்றினையும், இணைப்பு ஆதரவாக  4ஜி எல்.டி.இ., வைபை 6, ப்ளூடூத் 5.0, யு.எஸ்.பி. சி போன்றவற்றினையும் கொண்டுள்ளது.

மேலும் 11 இன்ச் மாடலினைப் பொறுத்தவரை இது 28.65 வாட் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 12.9 இன்ச் மாடலினைப் பொறுத்தவரை 36.71 வாட் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது.

Related posts

அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஃபாசில் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!!

TechNews Tamil

உலகின் முதல் SLED 4K ஸ்மார்ட் டிவியினை அறிமுகம் செய்த ரியல்மி நிறுவனம்!

TechNews Tamil

உடற்பயிற்சி செய்வோருக்கான iVoomi FitMe ஃபிட்னஸ் பேண்ட்!

TechNews Tamil