ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் என்றாலே அதற்குத் தனி மவுசுதான். அந்த மொபைல் போலவே அதற்கான பாலிசிகளும் இருக்கும். ஆப்பிள் ஐபோனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6, ஐபோன் 7 மற்றும் ஐபோன் எஸ்இ போன்ற மாடல்களுக்கு பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்ததை அடுத்து 4 ஆண்டுகளுக்கு முன்னர் புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டது. இந்த அப்டேட்டுகள் ஐபோனின் பேட்டரி திறனைக் குறைத்ததை அடுத்து பேட்டரி திறனை அதிகரிக்க புதிய சாப்ட்வேர் அப்டேட் ஒன்றை ஆப்பிள் வெளியிட்டது.

அந்த சாப்ட்வேரை அப்டேட் செய்த பயனர்களின் ஐபோன் செயல்திறன் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் மீது பயனர்கள் குற்றம் சாட்டினர்.
இதனால் அமெரிக்காவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையர்கள் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்ததை அடுத்து ஆப்பிள் நிறுவனம் 113 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.