எவ்வளவு காசு கொடுத்து, எவ்வளவு காஸ்ட்லியான போன் வாங்கினாலும், ஆப்பிள் ஸ்மார்ட்போனுக்கு நிகர் எதுவும் கிடையாது. பல இளைஞர்களின் ஆசை ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்பதே ஆகும்.
எவ்வளவு விலையாக இருந்தாலும், ஆப்பிள் ஐபோனுக்கு இருக்கும் மவுசு என்றும் குறைந்தபாடில்லை. ஆப்பிள் 5 ஜி ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிடும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் PCBA பாகங்களுக்கான இறக்குமதி வரியை 20 சதவீதமாக மாற்றியது, இது ஏற்கனவே 10 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது

மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன் சம்பந்தப்பட்ட அனைத்துவிதமான பாகங்களுக்கும் 20 சதவீதமாக உயர்த்தியது. இது ஏற்கனவே 15 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது
இந்த அதிகரிக்கப்பட்ட இறக்குமதி வரியால் ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டது, அதாவது ஐபோன்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்தது.
அந்த வகையில் ஐபோன் மாடல்கள் சில தற்போது விலை உயர்த்தப்பட்டு விற்பனையாகிறது.