உலக நாடுகள் அனைத்தும் பல வகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும், கொரோனா வைரஸ் பரவியது அதிர்ச்சிகரமான விஷயமாகும்.
சீனாவில் உற்பத்தியான இந்த வைரஸ், உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
சீனாவில் பாதிப்பு அதிகமானதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உள்ள ஆப்பிள் அனைத்து கடைகளையும் மூடுவதாக அறிவித்தது. மேலும் அதன்படி அந்தக் கடைகளை பிப்ரவரி 9 ஆம் தேதி வரை மூடுவதாக கூறியது.

சீனாவைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் உள்ள ஆப்பிள் கடைகளும் மீண்டும் மூடப்படுவதாய் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் ஓரளவு குறைய அமெரிக்காவில் சில ஆப்பிள் கிளைகள் திறக்கப்பட்டன.
தற்போது மீண்டும் அமெரிக்காவில் கொரோனா தீவிரமடைவதைத் தொடர்ந்து அரிசோனா, புளோரிடா, வடக்கு கரோலினா மற்றும் தெற்கு கரோலினா போன்ற மாகாணங்களில் திறக்கப்பட்ட 11 கிளைகளை ஆப்பிள் நிறுவனம் மீண்டும் மூடியுள்ளது.
மேலும் மூடப்பட்ட கிளைகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து எதையும் அறிவிக்காத ஆப்பிள் நிறுவனம், ஆப்பிள் கிளைகள் தற்காலிகமாக மூடல் என்று மட்டும் அறிவித்துள்ளது.