கொரோனா வைரஸ் தொற்றால், உலகம் முழுவதிலும் 17,77,867 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,08,867 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும், இந்தியாவில் 8000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும், கொரோனாவுக்கு எதிராகப் போராடி, எப்படியும் தொற்றை சரிசெய்ய வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகின்றது.
அதற்காக பலவித முறைகளில் முயற்சித்தும் வருகிறது, அந்த வகையில் கொரோனா தொற்று இருப்பவர்களுடன் ஏற்கனவே தொடர்பில் இருந்த நபர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களைத் தனிமைப்படுத்தும் விதமாக ஆப்பிள் மற்றும் கூகுள் இணைந்து செயலி ஒன்றை உருவாக்கி உள்ளன.

இந்த செயலியியானது ப்ளூடூத் கம்யூனிகேஷன் மூலம் இயக்கப்படும், மேலும் இந்த செயலியில் மிக எளிமையான வழிமுறைகளில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை அளிக்கும்.
இந்த செயலி கொரோனா பாதித்த நபருக்கு, எந்த இடத்தில் இருந்து தொடர்பு ஏற்பட்டது என்பது போன்ற விவரங்களை அளிக்காவிட்டாலும், தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படும்.
அதாவது இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தோராயமாக 2 வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா பாதித்த நபர்களுடன் தொடர்பிலிருந்த நபர்களுக்கு தகவல் அளிக்கப்படும்.
இதன்மூலம் கொரோனா பாதிப்பில் இருந்தவர்களுடன் தொடர்பிலிருந்த நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
இந்த செயலி மே மாதம் 15 ஆம் தேதிக்குப் பின்னர் வெளியாகலாம் என்றும் கூறப்படுகின்றது.