ஆப்பிள் நிறுவனம் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனை அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது. இந்த ஆப்பிள் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஆப்பிள் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஒவர் இயர் ஹெட்போன் ஸ்பேஸ் கிரே, சில்வர், கிரீன், ஸ்கை புளூ மற்றும் பின்க் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன் ஆனது ஒவர்-இயர் டிசைன், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஸ்பேஷியல் ஆடியோ போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 40எம்எம் டைனமிக் டிரைவர் மற்றும் ஹெச்1 சிப்செட் கொண்டதாகவும், மேலும் அகௌஸ்டிக் டிசைன் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இந்த் ஏர்பாட்ஸில் வால்யூம், பிளேபேக், அழைப்புகளை ஏற்பது மற்றும் நிராகரிப்பது போன்ற அம்சங்களும் உள்ளன.
மேலும் இது அடாப்டிவ் இகியூ ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பேரன்சி மோட் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ போன்றவற்றினையும், ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் டைனமிக் ஹெட் டிராக்கிங் வசதி தியேட்டர் போன்றவற்றினையும் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன் அதிகபட்சம் 20 மணி நேர பேக்கப் வழங்குவதாகவும் உள்ளது.