கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் பல முக்கியமான நிகழ்வுகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.
ஐபோன் எஸ்.இ. 2, ஐபேட் ப்ரோ போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிகழ்வானது, மார்ச் 31 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
சமீபத்தில் ஐபோன் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு விற்பனையாகிறது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உள்ள ஆப்பிள் அனைத்து கடைகளையும் மூடியது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் 31 வது சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் மாதம் ஆன்லைன் முறையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த டெவலப்பர்கள் நிகழ்ச்சியானது இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது, அதாவது ஆன்லைன் கீநோட் மற்றும் அமர்வுகளாக நடைபெற உள்ளது.
இந்த 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஒ.எஸ். 14, மேக் ஒ.எஸ். 10.16, வாட்ச் ஒ.எஸ். 7 மற்றும் டி.வி. ஒ.எஸ். 14 போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த 2020 சர்வதேச டெவலப்பகள் நிகழ்வில் உலகின் 155 நாடுகளை சேர்ந்த டெவலப்பர்கள் பங்குபெறுவர் என்று கூறப்பட்டு உள்ளது.
மேலும் இந்த நிகழ்வு குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.