சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது 7 வது ஜெனெரேஷன் ஐபேடை வாட்ச் சீரிஸ் 5 மாடல்களுடன் அறிமுகம் செய்தது.
அறிமுகம் ஆனது முதலே மிகச் சிறப்பான அளவில் ஆஃபர்களைக் கொண்டதாக உள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த ஐபேடு விற்பனைக்கு வரவுள்ளது.
இந்தியாவில் இந்த ஐபேட் விற்பனை அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கும் என்ரு தெரிகிறது. ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் யாதெனில் முன்பதிவு பற்றி தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

ஆப்பிள் ஐபேட் 7 வது ஜெனெரேஷன் ஐபேட் கோல்டு கோட்டிங்க் கொண்டதாக உள்ளது.
- 32 ஜி.பி. வைபை மாடல் விலை- ரூ. 29,900
- 128 ஜி.பி. வைபை மாடல் விலை- ரூ. 37,900
- 32 ஜி.பி. வைபை மாடல் விலை- ரூ. 40,900
- 128 ஜி.பி. வைபை மாடல் விலை- ரூ. 49,900
இந்த ஆப்பிள் ஐபேட் 10.2 இன்ச் என்ற அளவுடன், 2160×1620 தீர்மானத்தினைக் கொண்டுள்ளது, மேலும் இது பிக்சல் ரெட்டினா டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
கேமராவைப் பொருத்தவரை, 8 எம்.பி. கேமரா, f/2.4, 5P லென்ஸ், ஹைப்ரிட் ஐ.ஆர். ஃபில்ட்டர், 1.2 எம்.பி. கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது வைபை, ப்ளூடூத், டூயல் மைக்ரோபோன் போன்றவற்றையும் கொண்டுள்ளது, மேலும் இதில் 32.4 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரியும் உள்ளது.