Mobile

மேம்பட்ட அம்சங்களுடன் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன்!

ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், 2400 x 1080 பிக்கல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கார்ணிங் கொரில்லா கிளாஸ் ஆதரவைக் கொண்டுள்ளது.

ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் இது அட்ரினோ 610ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. ஓப்போ ஏ52 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இது  12எம்பி செல்பீ கேமரா ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் /க்ளோனாஸ் / பீடோஇ யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியானது விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இங்கிலாந்தில் அறிமுகமானது ஹானர் 8 எஸ் (2020) என்ற ஸ்மார்ட் போன்!!

TechNews Tamil

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தலான விலைகுறைப்பு.!

TechNews Tamil