Mobile

‘ஐபோன் 11’ இன் அறிமுக தேதி அறிவிப்பு!!

2019 ஐபோன் மாடல்களின் வெளியீடு விரைவில் நடக்கவுள்ளது, மேலும் ஆப்பிள் வெளியீட்டு நிகழ்வு அடுத்த மாதம் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய ஸ்மார்ட்போன்கள் ஐபோன் 11, ஐபோன் 11 புரோ மற்றும் ஐபோன் 11 மேக்ஸ் என்று அழைக்கப்படும். ஐபோன் 11 ஸ்மார்ட்போன் ஐபோன் XR-க்கு அடுத்தபடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது 6.1 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் இரண்டு பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கலாம்.

'ஐபோன் 11' இன் அறிமுக தேதி அறிவிப்பு!!

ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 மேக்ஸ் ஆகியவை ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ஆகியவற்றின் அடுத்த வரிசை ஸ்மார்ட்போனாக இருக்கும், அவை முறையே 5.8-இன்ச் மற்றும் 6.5-இன்ச் திரைகளை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்பிளின் ஏ12 பயோனிக் சிப்செட்களின் வாரிசான ஏ13 சிப்களால் அடுத்த தலைமுறை ஐபோன்கள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில், சாப்ட் பேங்க் தலைவர் கென் மியாச்சி, புதிய ஐபோன் மாடல்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று கூறியிருப்பது, இந்த ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

Related posts

ஜனவரி மாதம் அறிமுகமாகவுள்ள விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விற்பனைக்கு வந்தது OnePlus 7T Pro McLaren Edition!

TechNews Tamil

ஹூவாய் மேட் 30 ப்ரோ: சினி லென்ஸ் கொண்ட கேமரா அமைப்பு!

TechNews Tamil