வாட்ஸ்அப் செயலியானது உலக அளவில் பேஸ்புக்கினை அடுத்து அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாகும். வாட்ஸ் ஆப் செயலியானது பயனர்களால் அதிக அளவில் விரும்பப்படும் வகையில் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.
வாட்ஸ் ஆப்பினைப் பொறுத்தவரை ஸ்டிக்கர்கள் பயன்பாடு 2019 ஆம் ஆண்டு, அதன்படி தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சத்தை வழங்குவதற்கான சோதனையை துவக்கி உள்ளது. மேலும் இந்த அம்சமானது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் சோதனையினை துவக்கி உள்ளது.

ஆண்ட்ராய்டினைப் பொறுத்தவரை பீட்டா V2.20.194.7 பதிப்பிலும், ஐபோனைப் பொறுத்தவரை பீட்டா V2.20.70.26 வெர்ஷனிலும் சோதனையினைத் துவக்கியுள்ளது.
அதாவது இந்த அம்சம் சோதனை செய்யப்படுவது குறித்த ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், இதுகுறித்த வெளியிட்டுத் தேதிகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மேலும் இந்த அனிமேட்டெட் ஸ்டிக்கர் அம்சம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியிலும் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்த அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள் பார்க்கும்போது ஒருமுறை மட்டுமே அனிமேட் ஆகுவதாகவும் இருக்கும்.