Mobile

நோக்கியா பேசிக் மாடலிலும் இனி ஆண்ட்ராய்டு வசதி…

நோக்கியாவின் பேசிக் மாடல் தோற்றத்தில், கீபேட் உள்ள ஆண்ட்ராய்டு போன் வரவுள்ளது. செல்போன் வரத்தொடங்கிய காலத்தில் நோக்கியா நிறுவனத்தின் பேசிக் மாடல், கலர் போன் மக்கள் மத்தியில் கொடிகட்டி பறந்தது. சாமானிய மக்களுக்கும் பயனுள்ள வகையில் நோக்கியா மொபைல்கள் அமைந்தன.

கருப்பு வெள்ளை போன், கலர் போன், டார்ச் லைட் போன், எப்எம் போன் என பல்வேறு விதமாக நோக்கியா போன்கள் வரத் தொடங்கின. காலப்போக்கில் தொடுதிரை போன், ஸ்மார்ட்போன் வந்த பிறகு நோக்கியாவின் பேசிக் மாடல், முகவரியே இல்லாமல் போனது. 

நோக்கியா பேசிக் மாடலிலும் இனி ஆண்ட்ராய்டு வசதி…



இந்த நிலையில், தற்போது நோக்கியாவைப் போன்றே கீபேட் வசதியுடன் ஆண்ட்ராய்டு போன் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இது நோக்கியா போனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் டச் ஸ்கீரின் எதுவும் கிடையாது. பட்டனை பயன்படுத்தியே ஆப்ரேட் செய்ய முடியும். 

இது எந்த நிறுவனத்தினுடைய போன் என்பது குறித்த விபரங்கள் தெரியவில்லை. போனின் முன்புறத்தில் எந்த பெயரும் பொறிக்கப்படவில்லை. இருப்பினும் டிஸ்ப்ளே, கீபேட் எல்லாம் வைத்துப் பார்க்கும் போது நோக்கியாவின் தயாரிப்பாக இருக்கலாம் என்று செய்திகள் வந்துள்ளன.

Related posts

ரியல்மீ XT இன் சிறப்பம்சங்கள் !!!

TechNews Tamil

நாளை முதல் விற்பனைக்கு வருகிறது சாம்சங் கேலக்ஸி இசட்!!

TechNews Tamil

அமேசான் விற்பனை: சலுகை விலையில் பச்சை நிற ‘எல்.ஜி W30’

TechNews Tamil