எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்போது நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அண்ட்ராய்டு 10 அப்டேட்டில் கூடுதலாக டார்க் பயன்பாடு, ஸ்மார்ட் பதில், தனியுரிமை மற்றும் இருப்பிடத் தரவுகளின் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் சைகை வழிசெலுத்தல் போன்றவை உள்ளது.
நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ஆனது 5.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1920×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 630சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் மெமரியினைப் பொறுத்தவரையில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி
கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை 16எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
இது 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, மேலும் இணைப்பு
ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ், 4ஜிஎல்டி, போன்றவற்றினைக் கொண்டுள்ளது.