எச்எம்டி குளோபல் தற்போது நோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.
புதுப்பிப்பானது புதிய இருண்ட பயன்முறையையும், ஸ்மார்ட் பதில் விருப்பத்தையும் கொண்டுள்ளது. மேலும் Android 10 அடிப்படையிலான சைகை வழிசெலுத்தல், புதுப்பிப்பு தனியுரிமை மற்றும் இருப்பிடத்திற்கான கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது.
நோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போன் 6 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், 720×1440 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், மேலும் 2.5டி கிளாஷ் மற்றும் நாட்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
நோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போன் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரியினையும், மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.
நோக்கியா 3.1 பிளஸ் 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது வைஃபை, 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.