எச்எம்டி குளோபல் நிறுவனம் அதன் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனுக்கான ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பை வழங்குவதாய் அறிவித்துள்ளது.
- நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை- ரூ. 8,625
இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர் கொண்டதாக உள்ளது.

சேமிப்பு அளவினைப் பொறுத்தவரை 2 ஜி.பி. ரேம் வசதி மற்றும் 32 ஜி.பி. உள்ளடக்க மெமரி கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது முன்புறத்தில் 5 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் இது டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி. போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.