Uncategorised

சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!

சியோமி நிறுவனத்தின் மி ஏ2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டது, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் ஆனது 5.99 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

மேலும் கேமராவைப் பொறுத்தவரை 20எம்பி, 12எம்பி டூயல் ரியர் கேமரா போன்றவற்றினை பின்புறத்தில் கொண்டுள்ளது, மேலும் முன்புறத்தில் செல்பீ கேமரா 20மெகாபிக்சல் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

ரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிப்பு!!

TechNews Tamil

நோக்கியா ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.41,999 மட்டுமே!!

TechNews Tamil