சியோமி நிறுவனம் ரெட்மி கே 20 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்டபோனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் விரைவில் கிடைக்கும் என்று தெரிகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6.3 அங்குல FHD + + AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியினைக் கொண்டு உள்ளது.
மேலும் இது மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. இது 48MP சோனி IMX582 முதன்மை சென்சார், 124.8 டிகிரி FOV உடன் 13MP அகல சென்சார் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 8MP டெலிபோட்டோ சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

HDR, போர்ட்ரேட், புரோ, AI காட்சி கண்டறிதல் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இது 960fps ஸ்லோமோசன் வீடியோக்கள், 30fps 4k வீடியோக்கள் மற்றும் டைம் லேப்ஸ் வீடியோக்கள் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இது 4000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.