Mobile

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!

எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் புதிய நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, தற்போது இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளது.

1.   நோக்கியா 2.2 2ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் விலை- ரூ.5,999

2.   நோக்கியா 2.2 3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் விலை- ரூ.6,999

இந்த நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் ஆனது 5.71 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10  அப்டேட்!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர் வசதி கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

இந்த நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில், 13எம்பி ரியர் கேமராவினைக் கொண்டுள்ளது மற்றும் முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது, பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன், பேஸ் அன்லாக் வசதி கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

Funtouch OS 9.1 உடன் களமிறங்கிய Vivo Z1x இன் சிறப்பம்சங்கள்!

TechNews Tamil

சீனாவில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

மறந்துபோன ஸ்மார்ட்போன் பாஸ்வேர்டுகளை கண்டுபிடிப்பது எப்படி?

TechNews Tamil